முன்னதாக, அந்த மென்பொருளை கையாளுவதற்கான பயிற்சியை மத்திய அரசின் "இன்ஃபிலிப்நெட்' நிறுவனத்துடன் இணைந்து பேராசிரியர்களுக்கும், இணைப்புக் கல்லூரி ஆராய்ச்சி கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
ஆராய்ச்சி மாணவர்களால் சமர்ப்பிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் முழுக்க முழுக்க அந்த மாணவரால்தான் உருவாக்கப்பட்டதா அல்லது இணையதளத்தில் இருந்து திருடப்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கான மென்பொருள் இதுவரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இல்லை.
இப்போது அந்த மென்பொருளை பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் "இன்ஃபிலிப்நெட்' நிறுவனம் வழங்குவதோடு, அதைக் கையாளுவதற்கான பயிற்சியையும் பேராசிரியர்களுக்கு வழங்க உள்ளது. பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆராய்ச்சிக் கண்காணிப்பாளர்களுக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். வருகிற வியாழக்கிழமை (அக். 29) இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த மென்பொருளை இணைப்புக் கல்லூரிகளுக்கு இலவசமாக அளிக்கவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உண்மையான ஆராய்ச்சி மேம்படும் என்றார் அவர்.








