சுவிசர்லாந்து பேர்ன் நகரில் 1874-ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. அந்த நாளை உலக அஞ்சல் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் வாரமாக அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தபால் தலை சேகரிப்பில் பலர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான தபால் தலைகளை சேகரித்து தனது வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளார். பல்வேறு வகையான பறவைகள், விலங்குகள், நாட்டுத் தலைவர்கள், அஞ்சல் துறையின் வளர்ச்சியை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை, இந்திய ஜப்பானியக் கலைகளை விளக்கும் வகையிலான தபால் தலைகள், முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தை சித்தரிக்கும் வகையிலான சிறப்பு தபால் தலைஎன பல்வேறு சிறப்பு அஞ்சல் தலைகள் இவரிடம் உள்ளன.
இது தவிர நாட்டில் உள்ள 130 அஞ்சல் அலுவலக சிறப்பு முத்திரைகளை சேகரித்துள்ளார். அதாவது மாமல்லபுரம் அஞ்சலகத்தின் கடற்கோயில் முத்திரை, வேடந்தாங்கல் அஞ்சலகத்தின் வேடந்தாங்கல் பறவைகள் சராணாலய முத்திரை, மதுரை அஞ்சலகத்தின் மீனாட்சியம்மன் கோயில் முத்திரை, மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தர் அஞ்லகத்தின் முத்திரை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதுகுறித்து குமாரசாமி கூறியது:
அரிய வகையிலான தபால் தலைகள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டுக் கரன்சிகள் ஆகியனவற்றை வாங்கி சேகரித்துள்ளேன். இவ்வாறு சேகரித்துள்ளவற்றைப் பாதுகாப்பதற்கென்று வீட்டில் தனி அறையை ஒதுக்கியுள்ளேன். இது தவிர தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் கண்காட்சிகள் நடத்தி வருகிறேன். இன்றைய மாணவர்களுக்கு தபால் தலை, நாணயங்கள் சேகரிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் என்றார்.








