அரசின் நலத்திட்டங்களின் பயன்களை பெற, ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதற்கிடையே, புதிய தொழில் துவக்குவோர், மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய, கடந்த மாதம், புதிய விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், தொழில் துவக்குபவரின் ஆதார் எண்ணை, அரசு இணைய தள விண்ணப்பத்தின் முதல் பகுதி யில் நிரப்பியவுடன், ஆதார் எண் தகவல்கள் சரிதானா என, சோதிக்கப்படுகிறது. அதன் பிறகே, விண்ணப்பத்தை நிரப்ப முடிகிறது.
அரசின் இந்த நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பவன் துக்கல் கூறுகையில், ''ஆதார் எண்ணை, விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தலாம் என, சுப்ரீம் கோர்ட் உத்தர வில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. தொழில் முனைவோர், விண்ணப்பத்தில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது கோர்ட் அவமதிப்பாகும்,'' என்றார். இதுபோல, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.








