நீரிழிவு நோய் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது குறித்து 50 சதவீத இந்திய மக்கள் இதுவரை அறியாமலேயே உள்ளனர்
என புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை பகுப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக்
தாஸ் தெரிவித்துள்ளார்.
நோவா நார்டிஸ்க் நீரிழிவு ஆராய்ச்சி சங்கம் சார்பில்
9-வது தேசிய இன்சூலின் இரண்டு நாள் உச்சி மாநாடு புதுச்சேரி சன்வே ஓட்டலில்
இன்று துவங்கியது.
இதில் நாடு முழுவதும் இருந்த 300-க்கும் மேற்பட்ட நீரிழிவு மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பெருகிவரும் நீரிழிவு நோய், விளைவுகள், சிகிச்சை
முறைகள், இன்சூலின் சிகிச்சை பலன், புதிய மருத்துவ வசதி போன்ற
தலைப்புகளில் முன்னணி மருத்துவ நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
பிமஸ் மருத்துவமனை டாக்டர் அசோக் தாஸ் மாநாட்டுக்கு தலைமை தாங்கிப் பேசியதாவது:
இந்திய மக்களுக்கு பொதுவாக நீரிழிவு நோய் தாக்கம்
அதிகமாக உள்ளது. அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள், வாழ்வியல் முறை
மாற்றம், நகரமயமாக்கல், உலகமயாக்கல் பாதிப்புகள், போன்றவற்றால் நீரிழிவு
நோய் பாதிப்பு அதிகம் பரவி வருகிறது.
இந்தியாவில் 50 சதவிகித மக்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதே தெரியவில்லை.
இதனால் பல்வேறு நபர்களுக்கு இருதயம் உள்பட பல்வேறு
பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போதைய தேசிய இன்சுலீன் மாநாட்டில்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது குறித்த முனனோடி வழிமுறைகள்
விவாதிக்கப்படும்.
இதில் பங்கேற்கும் மருத்துவர்கள், நீரிழிவு நோய்
மருத்துவத்தில் தற்போதுள்ள முன்னேற்றம், இன்சூலின் பயன்பாட்டில் உள்ள
நுட்பங்கள் குறித்து அறிந்து சுகாதாரமான இந்தியாவை ஏற்படுத்த வேண்டும்
என்றார்.