ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில்
சனிக்கிழமை (நவ.7) தொடங்க உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி
தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய
அடையாள அட்டைக்காக ஆதார் அடையாள அட்டையைக் கணக்கெடுக்கும் திட்டத்தின்
கீழ், இப்பணி நடைபெறுகிறது. இதுவரை ஆதார் அட்டை பெறாத பள்ளி மாணவ,
மாணவிகளும், பொதுமக்களும் இந்த முகாம்களை பயன்படுத்திக்
கொள்ளலாம்.புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும் பள்ளி, பணி நடைபெறும் நாள்
(வட்டம் வாரியாக):
வேதாரண்யம்:
நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நவம்பர் 7, 8
தேதிகளிலும், கோடியக்கரை ஊராட்சி ஒன்றிய உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் 9,
11 தேதிகளிலும், தாணிக்கோட்டகம் ஆர்.சி. உதவிபெறும் தொடக்கப் பள்ளியில்
12-ஆம் தேதியும், தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
13-ஆம் தேதியும், வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
14-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.
திருக்குவளை:
ஆய்மூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நவம்பர் 7-ஆம் தேதி,
திருவாய்மூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 8-ஆம் தேதி, கீரம்பேர்
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 9-ஆம் தேதி, கொளப்பாடு ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 11, 12, 13 தேதிகளிலும், திருக்குவளை அஞ்சுகம்
முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் 14-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற
உள்ளன.
கீழ்வேளூர்: ஒக்கூர்,
பொலன்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 7-ஆம் தேதி,
காரப்பிடாகை, எட்டுக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 8,
பிரதாபராமபுரம், எட்டுக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில்
நவம்பர் 9, விலாம்பாக்கம், கடம்பங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளிகளில் நவம்பர் 11, கோகூர், பாலக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளிகளில் நவம்பர் 12, அகரகடம்பனூர், வடக்குவெளி ஊராட்சி ஒன்றியத்
தொடக்கப் பள்ளிகளில் நவம்பர் 13, ஒதியத்தூர், காருதாக்குடி ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 14-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.
நாகப்பட்டினம்:
நாகை ஜி.எஸ். பிள்ளை நடுநிலைப் பள்ளியில் நவம்பர்7, நாகூர் கெளதியா
தொடக்கப் பள்ளி, நாகை ஏஜெசி பப்ளிக் பள்ளி, ஆதர்ஷ் வித்யாலயாவில் நவம்பர்
7, 8, வெளிப்பாளையம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நவம்பர் 8, 9, நாகூர்
தேசிய தொடக்கப் பள்ளி, காடம்பாடி நகராட்சி தொடக்கப் பள்ளி, ஆதர்ஷ்
வித்யாலயாவில் 9-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.நாகூர் இஸ்லாமிய
நடுநிலைப் பள்ளி, நாகை கலைமகள் நர்சரி பள்ளி, நடராஜன் தமயந்தி உயர்நிலைப்
பள்ளி, சி.எஸ்.ஐ. நர்சரி பள்ளிகளில் நவம்பர் 12, நாகூர் மாணிக்க செட்டியார்
தொடக்கப் பள்ளி, பனங்குடி அரசு தொடக்கப் பள்ளி, நாகை ஏ.ஜெ.சி. நர்சரி
பள்ளி, முட்டம் அரசு தொடக்கப் பள்ளிகளில் 14-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற
உள்ளன.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை ஏ.ஜி.ஆர்.ஏ. மெட்ரிக்குலேஷன் பள்ளி, அறிவாலயம் மெட்ரிக்குலேஷன்
உயர்நிலைப் பள்ளி, ஆத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில்
நவம்பர் 7, 8, மயிலாடுதுறை சங்கர வித்யாலயா பள்ளி, பாலசரஸ்வதி மெட்ரிக்.
பள்ளிகளில் 11, 12, 13-ஆம் தேதிகளிலும் முகாம்கள் நடைபெறும்.
சீர்காழி:
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி, மடவாமேடு
புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொடியம்பாளையம் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணாஉயர்நிலைப் பள்ளிகளில் நவம்பர் 7,
8, புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நவம்பர் 9,
புதுப்பட்டினம் சக்தி மழலையர் தொடக்கப் பள்ளியில் நவம்பர் 11, புத்தூர்
பாரத் மெட்ரிக். பள்ளியில் 12, 13, 14-ஆம் தேதிகளிலும் முகாம்கள்
நடைபெறும்.
தரங்கம்பாடி:
பொறையாறு சர்மிளா காடஸ் மெட்ரிக். பள்ளியில் நவம்பர் 7 முதல் 12-ஆம் தேதி
வரையும் (நவ.10 நீங்கலாக), திருக்களாச்சேரி அய்யாஷ் மெட்ரிக். பள்ளி,
குருஞானசம்பந்தர் மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி, ஹமீதியா உதவிபெறும் பள்ளி,
வடகரை காஜாசாரா அம்மாள் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகளில் 13, 14-ஆம்
தேதிகளிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.குத்தாலம்: பெரம்பூர் செயின்ட் மேரி
மெட்ரிக். பள்ளியில் நவம்பர்7 முதல் 14-ஆம் தேதி வரை (நவ. 10 நீங்கலாக)
முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.