அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக
மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சட்டம்
இயற்ற வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பில், "உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் தமிழக நலனைக் காப்பது' எனும் கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும், அகில இந்திய தொகுப்பு முறையை ஏற்க முடியாது. தமிழ்நாடு மின்வாரியம் உற்பத்தி செய்யும் மின்சாரம் எப்படி, தமிழகத்துக்கு மட்டுமே சொந்தம். அது போலவே, தமிழக அரசு உருவாக்கிய உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள இடங்களை தமிழகத்துக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்
இரா.முத்தரசன் பேசியதாவது: தமிழக மாணவர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து
செயல்படுவோம். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பில், "உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் தமிழக நலனைக் காப்பது' எனும் கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும், அகில இந்திய தொகுப்பு முறையை ஏற்க முடியாது. தமிழ்நாடு மின்வாரியம் உற்பத்தி செய்யும் மின்சாரம் எப்படி, தமிழகத்துக்கு மட்டுமே சொந்தம். அது போலவே, தமிழக அரசு உருவாக்கிய உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள இடங்களை தமிழகத்துக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் வாதாடி, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றார்.
பின்னர், திமுக சட்டத் துறை துணைச் செயலர் வி.வைத்தியலிங்கம் பேசுகையில், "அனைத்து இடங்களும் தமிழக மாணவர்களுக்கு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்ற அம்சம் திமுகவின் சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாமக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.செந்தில், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன், காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தி வலியுறுத்தினர்.