'வங்க கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை அடுத்த இரு நாட்களில்
மிகத் தீவிரமடையும் என எதிர்பார்ப்பதால் நவ., 8 முதல், 11 வரை,
தமிழகத்தில் கன மழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவ.,
10 தீபாவளி பண்டிகையின் போது கன மழை பெய்யலாம் என, கணிக்கப்பட்டு
உள்ளது.டில்லியை தலைமையிடமாக கொண்டுள்ள, 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை
மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்க
கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை
வலுவடைந்து, குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி தமிழக
கடலோரத்தை நோக்கி, நவ., 8 முதல் நகரலாம் என, தெரிகிறது. இதனால் 8 முதல் 11
வரை நான்கு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், நாகபட்டினம் பகுதிகளில் கன
மழையும், பிற மாவட்டங்களில் பரவலான மழையும் பெய்யலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி நாளில், கனமழைக்கு அதிக பட்ச
வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
.புயல்:
அரபி கடலின் தென்மேற்குபகுதியில் உருவாகி உள்ள புயலுக்கு 'மெக்' என
பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயரை, இந்தியா தேர்வு செய்துள்ளது. 'மெக்'
என்பது சமஸ்கிருத வார்த்தை; மழை மேகம் என்பது இதன் பொருள். கடந்த வாரம்
அரபி கடலில் உருவான, 'சாப்லா' புயலை போலவே, 'மெக்' புயலும், வளைகுடா
நாடுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இந்த புயலால் நவ., 10 வரை,
அப்பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, டில்லியில் உள்ள வானிலை
சிறப்பு மையம் அறிவித்துள்ளது.