தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக தனியார் பள்ளி ஆசிரியையை
ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீஸார் தேடி
வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்-விமலாதேவி ஆகியோரின் மகள் அருணாதேவி (27). இவர், கல்லூரியில் படிக்கும்போது சிவகிரியைச் சேர்ந்த பரத் என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டாராம். பரத் திருநெல்வேலியில் உள்ள அரசு இசைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அருணாதேவி விளாத்திகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஜெயபிரதாப் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இத்தம்பதி குழந்தையுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளாத்திகுளத்தில் வசித்து வருகின்றனர். விளாத்திகுளத்திலிருந்து குடும்பத்தை இடம் மாற்றி திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல பரத் வற்புறுத்தி வந்த நிலையில் அருணாதேவி தொடர்ந்து மறுத்து வந்தாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு அருணாதேவியை, பரத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது பரத், அருணாதேவியின் கழுத்து, வயிறு உள்பட 6 இடங்களில், கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டாராம். இதுகுறித்து தகவலறிந்த விளாத்திகுளம் போலீஸார் அங்கு சென்று அருணாதேவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக அருணாதேவியின் தாய் விமலாதேவி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள பரத்தை தேடி வருகின்றனர்.