தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணி நிரவல் என்ற பெயரில்,
துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில்
பணியாற்றும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, 3 முதல்,
5ம் தேதி வரை பணி நிரவல் இடமாறுதல் நடந்தது. பகுதி நேர பாடப் பிரிவுகளில்,
காலியாக இருந்த, 3,500 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதில், விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆசிரியரும், 70 கி.மீ., நீண்ட துாரத்திற்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நலச் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:

பகுதி நேர ஆசிரியர் பணி நிரவல்
கலந்தாய்வில், அருகிலுள்ள இடம் ஒதுக்க, ஒரு லட்சம் ரூபாய் வரை பணம்
வாங்கியுள்ளனர். மாதம், 7,000 சம்பளம் பெற்று, கடனில் தவிக்கும்
ஆசிரியர்களிடம், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி,
முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.