தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில்,
சனிக்கிழமை ஆங்காங்கே மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை
ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
பலத்த காற்று: கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கு
எச்சரிக்கை அறிவிப்பு ஏதும் இல்லை. இருப்பினும் தென் தமிழகக் கடலோரப்
பகுதிகளில், வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில்
பலமான காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.