இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் மேதையுமான டாக்டர் அப்துல்கலாம் மரணமடைந்ததற்குப் பிறகு அவரின் உடல் ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் கடந்த ஜூலை 29-ந்தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டவேண்டும் என பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையினை ஏற்று, கடந்த ஆகஸ்டு 11-ந்தேதி மத்திய பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் நில அளவீட்டாளர்கள் மணிமண்டபம் கட்ட தேவையான நிலத்தை அளவீடு செய்தனர். ஆனால் இன்று வரை மணிமண்டபம் கட்டத்«தவையான எந்த நடவடிக்கைகளையும் மத்திய- மாநில அரசுகள் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








