சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியன் வங்கி குறிப்பிட்ட சலுகைகளுக்கு வருகிற ஜனவரி மாதம் 31–ந்தேதி வரை விலக்கு அளித்துள்ளது. அதன்படி பெருநகரம் மற்றும் பிற பகுதிகளில் பண பரிவர்த்தனை மற்றும் பண பரிவர்த்தனை அல்லாத ஏ.டி.எம். சேவைகள் பிற வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் எடுப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








