தமிழக முதல்–அமைச்சரின் உத்தரவிற்கிணங்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும், மழை வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான மேற்கண்ட 4 மாவட்டங்களில் மாணவ–மாணவிகள் தங்களது கல்விச்சான்றிதழ்களை மழை வெள்ளத்தில் இழந்திருப்பின் அவற்றின் இரண்டாம்படி சான்றிதழ்கள் (டூப்ளிகேட் சான்றிதழ்) பெற சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








