தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று
இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இன்று பள்ளிகளுக்கு மட்டும்
விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமா தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறவித்திருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 அணைகளும்
நிரம்பிவிட்டதால், உபரி நீர் தாமிரவருணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்தும் ஏராளமான உபரிநீர்
திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து
வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக இன்று
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.








