தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) படிக்கும் மாணவர்கள், வெள்ளத்தில்
சான்றிதழ்களை இழந்திருந்தால் சிறப்பு முகாம்கள் மூலமாக அவற்றைப் பெற்றுக்
கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு,
அதிக பாதிப்புக்குள்ளாகின. இந்த மாவட்டங்களில் மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட ஐடிஐ மாணவ-மாணவிகள் தங்களது கல்விச் சான்றிதழ்களை
இழந்திருப்பின் அவற்றின் நகல்களை பெறுவதற்கு வரும் 14-ஆம் தேதி முதல்
இரண்டு வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
மாணவ-மாணவிகளிடமிருந்து
விண்ணப்பங்களைப் பெற்று ஒரு வார காலத்திற்குள் கல்விச் சான்றிதழ் நகல்கள்
வழங்கப்படும். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி
பெற்றிருந்தாலும், கல்விச் சான்றிதழ்களை மழை வெள்ளத்தில் இழந்திருப்பின்
அவற்றின் நகல் சான்றுகளைப் பெறலாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
கடலூர் மாவட்டங்களில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்-தனியார்
தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் நடைபெறும் சிறப்பு முகாமுக்குச்
சென்று கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.