நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளி்ல் .சேருவதற்கு கோடிக்கணக்கான அளவில் கறுப்பு பணம் புழங்கி வருவதாக கூறப்படுகிறது.
நாடுமுழுழவதும்
422மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதில் தனியார் மருத்துவ
கல்லூரிகள் மட்டும் சுமார் 224 என்ற எண்ணிக்கையுடன் 53 சதவீத அளவிற்கு
பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த கல்லூரிகளில் பட்டபடிப்பு மற்றும் பட்ட
மேற்படிப்பு கற்று தரப்படுகிறது.
மேற்கண்ட 422
கல்லூரிகள் மூலம் ஆண்டு தோறும் 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ் பட்டபடிப்புகளும் ,
9 ஆயிரத்து 600 பட்ட மேற்படிப்புகளும் கற்றுதரப்படுகிறது. இந்த
படிப்புகளில் சேருவதற்காக ஆண்டு தோறும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்
வரையி்ல கறுப்பு பணம் புழங்கி வருவதாக கூறப்படுகிறது.
உ.பி.,
மாநிலத்தை பொறு்த்த வரையில் மருத்துவ பட்டப் படிப்பிறகு சுமார் 25 லட்சம்
முதல் 35 லட்சம் வரையிலும், பெங்களூரு போன்ற பெரு நகரங்களி்ல சுமார் ஒரு
கோடி வரையிலும் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாது
பட்ட மேற்படிப்புகளில் குறிப்பிட்ததக்க பிரிவு பாடப்பிரிவுக்கு சுமார் 3
கோடி ரூபாய் வரையில் வசூலிக்க்ப்படுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும்
பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில் குறைவான ஆசிரியர்கள், குறைவான வசதிகள்
உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.