தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருகிற
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி ஆகிய இருநாள்கள் வாக்காளர் பெயர்
சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதுதொடர்பாக தமிழகத தலைமைத்
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி வெளியிட்ட செய்தி குறிப்பு:
சிறப்பு
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வருகிற ஜனவரி 31
(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் பிப்ரவரி 6 (சனிக்கிழமை) ஆகிய இரு நாள்களுக்கும்
அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு பெயர் சேர்ப்பு முகாம்
நடத்தப்படுகிறது.
எனவே, வாக்களிக்க தகுதியுள்ள
நபர்கள் அனைவரும் தாங்கள் வாக்களிக்கும் வாக்குப் பதிவு மையங்களுக்குச்
சென்று தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் உரிய ஆவணங்களை அளித்து தங்கள்
பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.முழுமையான வாக்காளர் பட்டியலில் அரசின்
இணையதளமான http://elections.tn.gov.in என்ற முகவரியில்
வெளியிடப்பட்டுள்ளது.பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு
பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு ராஜேஷ் லகானி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.