Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம்: கருவூலம்-கணக்குத் துறை தகவல்:
வருமான வரி பிடித்தத்துக்கு உள்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை ("பான்') கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கருவூலம்-கணக்குத் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அத்துறை சார்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஓய்வூதியர்கள் மார்ச் முதல் பிப்ரவரி முடிய ஓராண்டில் பெறும் மொத்த ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவை ஆகியன கணக்கிடப்படுகின்றன.அவற்றின் மீது வருமான வரியானது மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்துபிடித்தம் செய்யப்படுகிறது.வரும் 25-ஆம் தேதிக்குள்...வருமான வரிச் சட்டத்தின் கீழ் தகுதியான முதலீடுகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களை ஓய்வூதியர்கள் ஜனவரி மாதத்தில் அளித்தால் அவற்றை சரிபார்த்து உரிய வரி மட்டும் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆவணங்களை ஜனவரி 25-ஆம் தேதிக்குள் அளிக்கத் தவறினால், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்-கருவூல அலுவலர் தங்களிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் வரி படித்தம் செய்ய நேரிடும்.நிரந்தர கணக்கு எண் வேண்டும்:
வருமான வரி பிடித்தத்துக்கு உள்படும் ஓய்வூதியர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கவில்லை எனில், ஓய்வூதியத்தின் மீது வருமான வரி பிடித்தம் செய்யப்படும்போது மிகையாக வரி பிடித்தம் செய்ய நேரிடலாம்.மிகையாக பிடித்தம் செய்யப்பட்டால்...:மிகையாக பிடித்தம் செய்யப்படும் வருமான ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் திருப்பி அளிக்கப்படாது. வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது மட்டுமே வருமான வரித் துறையிடம் இருந்து அதனை பெற இயலும்.இதுதொடர்பாக www.tn.gov.inkaruvoolam என்ற இணையதளம் அல்லது ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அல்லது கருவூலஅலுவலரிடம் இருந்து அறியலாம்.ஓய்வூதியர்கள் தாங்கள் பெறும ஓய்வூதியம், முதலீடுகள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை ஆண்டு தொடக்கத்திலேயே தெரிவிக்க ஏதுவாக உரிய படிவம் உள்ளது. அதனை, www.tn.gov.inkaruvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் அல்லது கருவூலத்தில் இருந்தும் பெறலாம்.www.incometaxindiaefilling.gov.in இணையதளத்தில் தங்களது வரி வரவு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம். TRACES என்ற இணையதளத்தில் இருந்து பெறப்படும் படிவம் 16-ஐ ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அல்லது கருவூல அலுவலர் அல்லது உதவி கருவூல அலுவலரால் கையெழுத்திட்டு வரும் மே 31-க்குள் வழங்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[20/01 07:04]
🎯பாலாஜி பிரசாத் 🎯:
கிராம பள்ளிகளை தத்தெடுக்கிறது விளையாட்டு பல்கலை
விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி: விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா, நாளை, கவர்னர் தலைமையில், ராஜ்பவனில் நடக்கிறது. இதில், பல்கலை மற்றும்அதன், 11 உறுப்புக் கல்லுாரிகளில் படித்த, 2,308 மாணவ, மாணவியரில், 161 பேர் பட்டம் பெறுகின்றனர்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையை, '12 பி' அந்தஸ்துக்கு உயர்த்தும், மத்திய அரசின் ஆய்வு முடிந்து விட்டது. 12 பி அங்கீகாரம் கிடைத்ததும், கிராம பள்ளி மாணவ, மாணவியரை தத்தெடுத்து,அவர்களுக்கு அறிவியல் ரீதியாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
[20/01 07:04]
🎯பாலாஜி பிரசாத் 🎯:
புதிய வாக்காளர் சேர்க்க வாய்ப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
'தமிழகத்தில் இன்று (ஜன.,20) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு வந்த பின் புதிய வாக்காளர்கள்,'ஆன் லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்,'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 82 ஆயிரம் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் தேவை. இதில் 8,000 இயந்திரங்கள் மட்டுமே இருப்பு உள்ளன. குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்படும். இவை பழுதாகி உள்ளதா என்பது குறித்து பிப்.,1 முதல் மார்ச் 10வரை 'பெல்' நிறுவனம் சரிபார்க்கும்.தமிழகம் முழுவதும் இன்று (ஜன.,20) காலை 10.00 மணிக்கு கலெக்டர்கள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவர். புதிய வாக்காளர்கள் அலைபேசி எண் குறித்து விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தால், அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். புதிய வாக்காளர்களுக்கானஅடையாள அட்டை அச்சிடும் பணி துவங்கி உள்ளது. அவை இம்மாதத்திற்குள் வழங்கப்படும்.புதிய வாக்காளர் சேர்க்கை அறிவிப்பு வந்த பின், 'ஆன் லைனில்' மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புகார்கள் குறித்து தெரிவிக்க அலைபேசி எண் வழங்கப்படும். புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தலுக்கு கட்சியினர் மற்றும் பிறர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அனுமதி பெற, 'ஆன் லைனில்'மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் வாகனம், உரிமையாளர், பயன்படுத்தும் கட்சி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக பெறலாம், என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








