Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
விழுப்புரம் எஸ்.வி.எஸ். மாணவர்கள் அரசுக் கல்லூரிக்கு மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:
விழுப்புரம் எஸ்.வி.எஸ். மாணவர்கள் அரசுக் கல்லூரிக்கு மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:
மூன்று மாணவிகள் மரணம் அடைந்து
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விழுப்புரம் எஸ்.வி.எஸ்., கல்லூரி
மாணவர்களை, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா-இயற்கை மருத்துவக்
கல்லூரிக்கு மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் செயல்பட்டு
வரும் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்
ஆண்டு படித்து வந்த மூன்று மாணவிகள் இறப்பு குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.
விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் அனுமதி: எஸ்.வி.எஸ். கல்வி மற்றும்
சமுதாய சேவை அறக்கட்டளை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம், என்ற பெயரில் கல்லூரியைத் தொடங்கவும், ஆண்டுதோறும் 50
மாணவர்களைச் சேர்க்கவும், கடந்த திமுக ஆட்சியில் 2008-ஆம் ஆண்டு அனுமதி
வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவப் பல்கலைக்கழகம் கடந்த 2009-ஆம் ஆண்டு அந்தக் கல்லூரிக்கு
தற்காலிக இணைப்பு வழங்கியது.
தொடர் தாற்காலிக இணைப்பு: இதனைத் தொடந்து யோகா மற்றும்
இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு, 2009-2010- ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர் தாற்காலிக
இணைப்பினை 2014-2015-ஆம் ஆண்டு வரை வழங்கி வந்துள்ளது. இந்த
கல்வியாண்டுக்கு (2015-2016) கல்லூரி இணைப்புக்கான அனுமதி கோரியுள்ள
விண்ணப்பம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின்
பரிசீலனையில் உள்ளது.
இதே அறக்கட்டளைக்கு 50 மாணவர்களுடன் ஹோமியோபதி மருத்துவ
பட்டப்படிப்பு கல்லூரி தொடங்குவதற்கும் முதல் கட்டமாக கடந்த திமுக அரசால்
அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கல்லூரியின் விண்ணப்பத்தை மத்திய அரசு
நிராகரித்தது.
உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய
சேவை அறக்கட்டளை தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில், இந்த அறக்கட்டளைக்கு
கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்த
ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 2014-ஆம் ஆண்டு முதல் இரண்டு கல்வி
ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்
பல்கலைக்கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டது.
அரசு கல்லூரியில் சேர்க்கை: எஸ்.வி.எஸ் யோகா மற்றும்
இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதியும்,
அவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கத்திலும்
அந்தக் கல்லூரியில் பயின்று வரும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா
மாணவர்களை சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்
கல்லூரிக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில்
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஹோமியோபதி மருத்துவ மாணவர்களை...:
ஹோமியோபதி கல்லூரி மாணவர்களைப் பொருத்தவரையில், அவர்களை
இதர ஹோமியோபதி கல்லூரியில் ஒதுக்கீடு செய்வதற்கு, மத்திய ஹோமியோபதி
குழுமம் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதனை உடனடியாகப்
பெற்று, அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை மாற்ற நடவடிக்கை
எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








