தேதிகளில், மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்தி போராட முடிவு செய்துள்ளது.இதனால், இம்மூன்று தினங்களில் ஏராளமான ஆசிரியர்கள் பணிக்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், நாளைகாலை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரும் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யவும், பெயர் சேர்க்கவும் இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.
இவற்றில் விண்ணப்பம் பெறவும், சரிபார்க்கவும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் இடங்களில், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்துவதில் சிக்கல் ஏற்படும். இதற்கான மாற்று ஏற்பாடுகளோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ எடுக்காத பட்சத்தில், பல இடங்களில் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகும்.








