ஆர்ப்பாட்டத்துக்கு
ஜேக்டோ அமைப்பின் மாவட்ட தொடர்பாளர்கள் சோமசுந்தரம், சண்முகம் ஆகியோர்
தலைமை தாங்கினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு
பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரிய–ஆசிரியைகள் கலந்து
கொண்டனர்.அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரிய–ஆசிரியைகள்
அனைவரும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அப்போது
ஈரோடு டவுன் போலீஸ் டி.எஸ்.பி. சம்பத் மற்றும் போலீசார் விரைந்து வந்து,
ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினர்.ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலமாக செல்ல
அனுமதியில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.இதனால் ஜேக்டோ அமைப்பினர்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதைதொடர்ந்து கலெக்டர்
அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற ஆசிரிய–ஆசிரியர்களை போலீசார் கைது
செய்தனர். இதில் 1000–க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.