விவசாயி ஆக இருந்து சூழ்நிலை காரணமாக லாரி டிரைவராக மாறிய எம்.கண்ணப்பனுக்கும் , கே.லட்சுமிக்கும் 1982, ஜுன் 7ம் தேதி மகனாக பிறந்தார். லாரி டிரைவராக இருந்த தந்தை கண்ணப்பனின் வருமானம் தனது இருமகன்களின் படிப்பு செலவிற்கும் வீட்டில் தையல் வேலை செய்து வரும் வருமானத்தில் தாய் லட்சுமி தனது வீடு செலவையும் கவனித்துக் கொண்டார்கள்.
படிக்கும் காலத்தில் கடினமாக பயிலும் மாணவன் .
பிளஸ்2 படிப்பிற்கு பிறகு பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் இஞ்சினியரிங் முடித்த நந்த குமார் கோயமுத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். பகலில் வேலை இரவில் படிப்பு என்று கடினமாக உழைத்தும் வேலைபழுவின் காரணமாக எங்கே தனது ஐஏஎஸ் கனவிற்கு தடை வந்துவிடுமோ என்று நினைத்து வேலையை துறந்து முழு மூச்சாக தனது ஐஏஎஸ் முயற்ச்சிக்கு உழைத்தார்.
இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவருக்கு ஐஏஎஸ் ஆபிசராக வேண்டும் .
யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியில் தோல்வி அடைந்த போதிலும் இரண்டாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 350வது இடத்தைப் பிடித்தார்.இதன் பலனாக ரயில்வேயில் வேலை கிடைத்தது.தனது கனவாக ஐஏஎஸ் இருந்த போதிலும் குடும்ப பொருளாதார சூழ் நிலை காரணமாக தன் தந்தைக்கும், தனது தம்பி அரவிந்த் குமாரின் படிப்பிற்கு உதவவே ரயில்வே பணியில் சேர்ந்தார். அங்கும் பகலில் பணி இரவில் படிப்பு என்று கடினமாக உழைத்து தனது ஐஏஎஸ் கனவை நனவாக்க உழைத்துக் கொண்டு இருந்தார்,
தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியாக தனது கனவு பரீட்சையை 2006ல் எழுதினர், 2007 மே 16ம் தேதி தேர்வு முடிவு வந்தது. தமிழ் மொழியில் எழுதிய அந்த தேர்வில் அகில இந்திய அளவில் 30 வது இடத்திலும் , தமிழகத்தில் முதலாவதாகவும் வந்தார்.
தமிழின் முலம் ஐஏஎஸ் எழுதிய நந்தகுமார் தமிழ் இலக்கியத்தையும் பூகோளத்தையும் தனது விருப்ப பாடமாக எடுத்து இருந்தார்.
அவர் மேலும் கூறுகையில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற தமக்கு தமிழ் மூலம் ஐஏஎஸ் எழுதுவது விருப்பமாக இருந்தது என்றார்.
தனது வாழ்க்கையின் வெற்றிக்கு தன்னுடைய தந்தையே காரணம் என்றும் அவர் தனக்கு தந்தையாக மட்டும் இல்லாமல் நண்பனாகவும் இருந்தார் என்றார்.
சாதாரண நிலையில் இருந்து தனது கடின உழைப்பின் மூலம் தற்பொழுது நமது மாவட்ட கலெக்டராக உயர்ந்து நிற்கும் நமது மாவட்ட கலெக்டர் நந்தகுமாரின் வாழ்க்கை நமது மாணவ செல்வங்களுக்கு ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமில்லை








