தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது: அரசு பள்ளிகள் நாளை முடங்கும் அபாயம்-News Source Dinakaran news paper: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது: அரசு பள்ளிகள் நாளை முடங்கும் அபாயம்-News Source Dinakaran news paper:

கோரிக்கைகளை  நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.  ஆசிரியர்கள் போராட்டத்தால் நாளை பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் முறையை கொண்டு வர வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண்டும்,  தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தமிழ்மொழி வழிக்கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி ஜனவரி 30, 31, பிப்ரவரி 1ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு  (ஜாக்டோ) அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஜாக்டோ அமைப்பை  சேர்ந்த உயர் மட்ட குழு உறுப்பினர் சங்கர பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பக்தவச்சலம், சி.உதயகுமார், ஆர்.பெருமாள்சாமி, சென்னை மாவட்ட  நிர்வாகிகள் சத்தியநாதன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டு  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.  அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அருகில் உள்ள  மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாவட்டங்களில்: இதுபோல மாவட்டங்களிலும் போராட்டம் நடத்திய பல  ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 2 லட்சம் ஆசிரியர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல்,  தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட தலைநகரங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.   சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த மறியலில் 3,219 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையில் நடந்த ஆசிரியர்கள் மறியலின்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு 500 பேர் கைது  செய்யப்பட்டனர்.  தூத்துக்குடியில் 250 பேர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள், திருச்சியில் 707பேர், நாகையில் 1,030பேர்,  தஞ்சையில், 850பேர், புதுக்கோட்டையில் 527பேர், கரூரில் 320 ஆசிரியர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரியில் 190 பேர், திருப்பூரில்  1500, ஈரோட்டில் 1735, நீலகிரியில் 334, கோவையில் 950, விழுப்புரம் 800, கடலூர் 400 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, சங்கர பெருமாள்  அளித்த பேட்டி: ஜாக்டோவின் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3  லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. தொடர் மறியல்  போராட்டத்திற்கு பிறகும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இறுதி கட்டமாக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்  நடத்தப்படும். காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 10, 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், நாளை தமிழகம் முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள்  வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால் அன்றைய வகுப்புகளும் முற்றிலும் முடங்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல்  போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்துணவு அமைப்பாளர்கள் வகுப்பு நடத்த உத்தரவு

நாளை  வரை ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பதால் பள்ளிகளை திறந்து செயல்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க  கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு கல்வி அதிகாரிகள்  பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள் இல்லாமல் எக்காரணத்தை கொண்டும் பள்ளிகளை மூடக்கூடாது, சத்துணவு  அமைப்பாளர்களை கொண்டு வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘அதிமுக அரசுக்கு பாடம் கற்பிப்போம்’
செய்வீர்களா? செய்வீர்களா? என்றால் செய்தீர்களா? செய்தீர்களா? என்று கேட்போம்


நெல்லை ரயில் நிலையம் முன்பு ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த சட்டமன்ற  பொதுத்தேர்தலின்போது தன் பங்கேற்பு ஊதியத் திட்டம், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என்று இன்றைய முதல்வர் வாக்குறுதி  அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டது. முதல்வர் பிரசாரத்தின் போது நீங்கள் செய்வீர்களா?  செய்வீர்களா? என்று கேட்டுக் கொண்டதன்படி நாங்கள் செய்தோம். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி எங்களுக்கு செய்யவில்லை. வரும்  தேர்தலில் அவர் ஓட்டு கேட்டு வந்தால் நீங்கள் ெசய்தீர்களா? நீங்கள் ெசய்தீர்களா? என கேட்போம்.

2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆசிரியர்களின் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் இவர்களுக்கு ஏற்கனவே நாங்கள் பாடம் கற்பித்தோம்.  இப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இன்னும் கால அவகாசம் இருக்கிறது. உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை  நிறைவேற்ற முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் அதேபோன்ற பாடம் புகட்ட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரக்கூடிய சட்டமன்ற  தேர்தலில் எங்களின் ஒற்றுமையை காட்டுவோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H