மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சிறந்த சேவை புரிந்த 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.மாற்றுத்
திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்,
கலைநிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில்
நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு முதன்மைச் செயலர் முகமது நசிமுத்தீன் தலைமை
வகித்தார். மாநில ஆணையர் மணிவாசன் வரவேற்புரை வழங்கினார்.
இதில்,
விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுகளையும், சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளையும் சமூக நலத்துறை
அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.விருது பெற்றவர்கள் விவரம்:பேராசிரியர்
ஆர்.ரவி-திருநெல்வேலி, பி.நாகவேல்-மதுரை, எம்.ரவிச்சந்திரன்-சென்னை,
இ.முத்துக்குமார்-திருநெல்வேலி, இ.நயினார்-திருநெல்வேலி,
டி,கோவிந்தராஜன்-சென்னை, ச.சாந்தரூபி-விருதுநகர், அ.அலமேலு-சென்னை,
எம்.பி.ஜெயசுதா-சென்னை, கி.செல்வராஜ்-திருச்சி, மயோபதி
காப்பகம்-திருநெல்வேலி, புதுருனிஸா (கணவர் மகாதேவன் சார்பில்)
-சி.சி.பைன்
புட்ஸ் சவுத் இந்தியா(பிரைவேட்) லிமிடெட்-சென்னை, எஸ்.பி.முருகையன்(அரசு
விரைவுப் பேருந்து ஓட்டுநர்)-மதுரை, பி.கணபதி (அரசு விரைவுப் பேருந்து
நடத்துநர்)-தூத்துக்குடி.