தமிழகத்தில் முதுநிலை பட்டம், முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவை சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் 2016-2018-ஆம் கல்வியாண்டுக்கான மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு, பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்றது.
முதுநிலை படிப்புகளுக்கு 1,163 இடங்கள், முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு 40 இடங்கள் என மொத்தம் 1,203 இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. சென்னையில் ஐந்து மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 11,067 பேர் எழுதினர். 90 மதிப்பெண்ணுக்கான தேர்வு முடிவு கடந்த 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
முதுநிலை, முதுநிலை பட்டயம், 6 ஆண்டுகள் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகிய படிப்புகளில் 7,048 பேருக்கும், முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் 532 பேருக்கும் தகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தகுதிப் பட்டியல் விவரங்களை காணலாம். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.








