இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஐ.சி.எஸ்.ஐ தலைவர் பி.எஸ். மம்தா பினானி சனிக்கிழமை கூறியதாவது:
மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், இந்திய நிர்வாகவியல் பயிற்சி நிலையம் (ஐ.ஐ.எம்) மற்றும் இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிலையம் (ஐ.ஐ.டி) ஆகியவற்றின் பாடத்திட்டங்கள் மூலமாகப் பயின்று அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு இந்த விருது வழங்கப்படும்.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு "சிஎஸ் ஒலிம்பியாட்' என்ற போட்டி நடத்தப்படவுள்ளது.
முதலாவது சிஎஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும்.
இந்தத் தேர்வுகளுக்காக "சயின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேஷன்' என்ற அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இதுபோன்ற தேர்வுகள், மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டிகளுக்கு வித்திடும் என்றார்.








