உதவி புள்ளியியல் துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270 காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது.தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. இதற்காக, 541 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு வரும் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அழைப்புக் கடிதம் (Notice of Certificate
Verification) தேர்வாணையத்தின் இணைய தளத்தில்(www.tnpsc.gov.in) பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்புக் கடிதத்தை
தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு
ஒதுக்கப்பட்டுள்ள நாள்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம்
என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270 காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது.தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. இதற்காக, 541 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு வரும் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.