Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட
தூய்மையான நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் திருச்சி நகரம், இந்தியாவிலேயே
3–வது இடத்தை பிடித்து உள்ளது.
தூய்மை இந்தியா திட்டம்
மத்தியில் கடந்த 2014–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசு
செயல்படுத்திய முக்கிய திட்டங்களில், ‘தூய்மை இந்தியா’ திட்டமும் ஒன்று.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இதை விளம்பரப்படுத்த
அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தூதர்களாகவும்
நியமித்தார்.
மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், மாநில
அரசுகளால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சிறப்பாக
செயல்படுத்தப்பட்டு வரும் இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கிய
பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டியல் வெளியீடு
‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள
தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு
நடத்தி, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி முதன்முறையாக கடந்த
ஆண்டு ஆகஸ்டில் பட்டியல் வெளியிடப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட
அடுத்தகட்ட ஆய்வின் படி தயாரிக்கப்பட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலை,
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று
டெல்லியில் வெளியிட்டார். இந்த பட்டியலில் 3–வது இடத்தை தமிழகத்தின்
திருச்சி நகரம் பிடித்துள்ளது.
முதலிடத்தில் மைசூரு
இந்த பட்டியலில் கர்நாடகாவின் மைசூரு மாநகரம் முதலிடத்தையும்,
சண்டிகர் 2–வது இடத்தையும் பிடித்துள்ளன. தலைநகர் டெல்லி 4–வது இடத்தையும்,
விசாகப்பட்டினம் (5), சூரத் (6), ராஜ்கோட் (7), சிக்கிம் மாநிலத்தின்
கேங்டாக் (8), மராட்டியத்தின் பிம்ப்ரி சிந்துவாட் (9), மும்பை (10) போன்ற
நகரங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
தமிழகத்தின் பிற நகரங்களான மதுரை, 34–வது இடத்தையும், சென்னை 36–வது இடத்தையுமே பிடித்துள்ளன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








