SSTA காலவரையற்ற உண்ணாவிரதம் எதனால்??? 2009 க்கு பின் வந்தவர்களுக்கு என்ன தான் பாதிப்பு??? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


SSTA காலவரையற்ற உண்ணாவிரதம் எதனால்??? 2009 க்கு பின் வந்தவர்களுக்கு என்ன தான் பாதிப்பு???

SSTA காலவரையற்ற உண்ணாவிரதம் எதனால்???✔ 6வது ஊதியக்குழுவினால் உண்மையிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டது 2009 ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட இ.நி.ஆசிரியர்கள் மட்டுமே. .. ஓரே பதவி,ஓரே கல்வித்தகுதி ,ஓரே பணி ஆனால் ஒரு மாதத்திற்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு ரூபாய்-8000 வரை வித்தியாசம்...                             # உலக வரலாற்றிலேயே ஊதியக்குழுவில் முன்னர் கொடுத்த ஊதியத்தை -8370 ஐ குறைத்து கொடுத்த ஊதியக்குழுவும் இந்த 6 வது ஊதியக்குழுவும் தான்...                                                                                                               # ஆண்டுகள் செல்ல செல்ல அடிப்படை ஊதியம் உயர  வேண்டும் என்பது நியதி ,குறையக்கூடாது...                                   இந்த அடிப்படை நடைமுறைக்கூட 6 வது ஊதியக்குழுவில் பின்பற்றப்படவில்லை...                   பணிக்கு வாருங்கள் என்று அழைத்த ஊதியமோ -8370+2800 ல்
                              ( பழைய ஊதியகட்டு-4500+2250+ DA 24%-1620-  Total-8370)  தந்தது-5200+2800  இதை இதுவரை கேட்க எவருமில்லை....

��2009 ல்  ஆரம்ப ஊதியமோ -9475 (ஊதியமும் மிகக் குறைவு)... பணியோ பல நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மாவட்டங்களில். .
மாவட்ட மாறுதல்கள் இல்லவே இல்லை. ..

��மாவட்ட மாறுதல் கிடையாது என்ற அரசின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று புதுதில்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வரலாற்று தீர்ப்பை செப்டம்பர்-5 2013 ல்  பெற்றது SSTA. அந்த வழக்கு 289 பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் என பெறாமல் 2009 க்கு பின்னர் எல்லாவிதத்திலும் பாதிக்கப்பட்ட அனைத்து இ.நி.ஆசிரியர்களுக்கும் மாவட்ட மாறுதல்கள் பெற ஆவண செய்தது SSTA. அதனால் தான் அதன்பின்னர் இன்று வரை நியமிக்கப்பட்ட முக்கியமாக தகுதித்தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட இ.நி.ஆசிரியர்கள் வரை அனைவரும் மாவட்ட மாறுதல்கள் பெற முடிகிறது.                                                                                           * நான்கே ஆண்டுகளில் 40 ஆண்டுகள் மற்ற இயக்கங்கள் செய்தவற்றை செய்து முடித்துள்ளது...

�� ஆனால் நமது ஊஔதிய வகையிலும் 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இ.நி.ஆசிரியர்கள் மாநில ஆசிரியர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தை விட 8000 வரை குறைந்த ஊதியம் பெற்று வரும் நிலையே இன்றும்...

��2009 ஜூலை முதல் டிசம்பர் வரை பெற்ற மொத்த ஊதியம் ரூ.55,837. மாநில அரசு ஆசிரியர்களுக்கு இணையாக (1.86ஆல் பெருக்கி ) வழங்கப்பட்டிருந்தாலே ரூ.77,603 கிடைத்திருக்கும். இழப்பு ரூ21,766.

��அது போலவே 2010 ஜனவரி முதல் டிசம்பர் வரை நாம் பெற்றது ரூ.1,36,488. பெற்றிருக்க வேண்டியது ரூ.1,90,614.
இழப்பு ரூ.54,126.

��2011 ஜனவரி முதல் டிசம்பர் வரை நாம் பெற்றது ரூ.1,69,234. பெற்றிருக்க வேண்டியது ரூ.2,30,808.
இழப்பு ரூ.61,574.

��2012 ஜனவரி முதல் டிசம்பர் வரை நாம் பெற்றது ரூ.1,90,127. பெற்றிருக்க வேண்டியது ரூ.2,59,300.
இழப்பு ரூ.69,173.

��2013 ஜனவரி முதல் டிசம்பர் வரை நாம் பெற்றது ரூ.2,15,094. பெற்றிருக்க வேண்டியது ரூ.2,93,268.
இழப்பு ரூ.78,174.

��2014 ஜனவரி முதல் டிசம்பர் வரை நாம் பெற்றது ரூ.2,43,775. பெற்றிருக்க வேண்டியது ரூ.3,32,320.
இழப்பு ரூ.88,546.

��2015 ஜனவரி முதல் டிசம்பர் வரை நாம் பெற்றது ரூ. 2,66,643.பெற்றிருக்க வேண்டியது ரூ.3,63,474.
இழப்பு ரூ.96,831.

[இந்த கணக்கீடு HRA,  MA & EL ஒப்படைப்பு சேர்க்காமல் கணக்கிடப்பட்டது.]

��டிசம்பர் 2015 வரையான 5 1/2 ஆண்களில் நாம் பெற்றது ரூ.12,77,198.
மாநில அரசு ஆசிரியர்களுக்கு இணையாக பெற்றிருக்கும் பட்சத்தில் ரூ.17,47,387.
ஊதிய இழப்பு ரூ.4,70,189.

இத்தோடு HRA,  MA & EL ஒப்படைப்பு சேர்த்தால் ₹ 5,50,000 வரும்.

�� தோராயமாக வருடத்திற்கு ஒரு லட்சம் இழப்பை சந்தித்து வரும்  நமக்கு மாநில அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கிடைக்க மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுவரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறது SSTA.


❎நாம் போராடும் மற்ற சங்கத்திற்கோ,
போராட்டம் நடத்தும் சக ஆசிரியர்களுக்கு எதிரானவர்களோ அல்ல.. நமது கோரிக்கையை வைக்கவில்லை என்பதால் இந்த கடுமையான போராட்டத்தினை கையில் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்... இத்தகைய நிலையில் தான் SSTA  இப்போராட்டத்தினை எடுத்திருக்கிறது.

போராட்டம் என்றால் காலையில் சென்று மாலையில் வீடுதிரும்புவது ...அல்ல            ஓரே கோரிக்கையை முன்வைத்து காலவரையற்ற போராட்டமே தற்போதைய நிலையில் கைகொடுக்கும்....

உண்மையான இடைநிலை ஆசிரியர்களின் நலனில் அக்கறை கொண்ட இயக்கங்களும்,ஆசிரியர்களும் ஆதரவு தாரீர்....                                                                     உயிரை துச்சமென மதித்து போராட்ட களத்தில் களம் இறங்கும் உண்மை போராளிகளுக்காக....

" உணர்வுக்கு குரல் கொடுப்போம் !!! "உரிமைக்கு உயிர் கொடுப்போம்,!!!மாநில அமைப்பு. .
SSTA.                                             வேல்முருகன்- மாநில துணைச்செயலாளர்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H