பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கான உயர்கல்வியை தேர்வு செய்ய
உதவும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம்
ஹாலில் ஏப்.,2 முதல் 4 வரை நடக்கிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எந்த
கல்லுாரி யில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும்
வகையில், ஒவ்வொரு ஆண்டும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படு கிறது.
இதில்
கருத்தரங்குகள், கண்காட்சி இடம்பெறும்.கண்காட்சியில் பல்வேறு கல்வி
நிறுவனங்கள் சார்பில் 93 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. காலை 10.00 முதல்
மாலை 6.30 மணி வரை மாணவர்கள்,பெற்றோர் கண்காட்சியை
பார்வையிடலாம்.வேலைவாய்ப்புக்கு ஏற்ற படிப்புகள் குறித்து பல்வேறு
தலைப்புகளில் நடக்கும் கருத்தரங்குகளில், 18 வல்லுனர்கள் காலை 10.00 முதல்
11.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரையும்
பேசுகின்றனர்.முக்கிய படிப்புகள் குறித்த சந்தேகங்களுக்கும் வல்லுனர்கள்
பதில் அளிக்கின்றனர். கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்
அளிப்பவர்களுக்கு 'டேப்லட்கள்' மற்றும் வாட்சுகள் பரிசாக வழங்கப்படும்.
அப்ளிகேஷன்
முதல் அட்மிஷன் வரை' பல ஆலோசனைகள் இந்நிகழ்ச்சி யில் வழங்கப்படும்.
பங்கேற்கும் மாணவர்களுக்கு 'எந்த கல்லுாரியில் என்ன படிப்பு உள்ளது' என்பது
பற்றிய முழுமையான வழிகாட்டி புத்தகங்கள் இலவசாக வழங்கப்படும்.நிகழ்ச்சியை
பாரத் பல்கலை இணைந்து வழங்கு கிறது. பவர்டு பை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி
நிறுவனங்கள்.
கோ ஸ்பான்சர்கள் நேரு குழுமக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.எம்.சி.எச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள். அனுமதி இலவசம்.







