தமிழகத்தில் 8 நகரங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.கோடைக்காலத்தின்
ஆரம்பத்திலேயே தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
மதுரை, சேலம், திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் வெப்பத்தின்
அளவு தொடர்ந்து 100 டிகிரிக்கும் அதிகமாகவே பதிவாகிறது.சென்னையைப் பொருத்தவரை பகல் நேரங்களில் வெயிலுடன், அனல் காற்றின் தாக்கமும் ஏற்படுகிறது. இந்நிலையில்,
வெள்ளிக்கிழமை திருப்பத்தூரில் அதிகபட்சமாக 104 டிகிரியும்,
பாளையங்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் 102 டிகிரி வெப்பம்
பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை பதிவான
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
- திருப்பத்தூர் 104
- திருச்சி 102
- சேலம் 102
- பாளையங்கோட்டை 102
- மதுரை 102
- தருமபுரி 102
- வேலூர் 100
- தஞ்சாவூர் 100
- கோவை 99
- திருத்தணி 99







