மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான (100
நாள் வேலைத் திட்டம்) மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி
திட்டத்திற்கான ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது
குறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்)
ஊதிய விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 183 ரூபாயிலிருந்து 203
ரூபாயாகவும், கேரளாவில் 229 ரூபாயிலிருந்து 240 ரூபாயகவும, கர்நாடகவில் 204
ரூபாயிலிருந்து 224 ரூபாயாகவும், ஆந்திராவில் 180 ரூபாயிலிருந்து 194
ரூபாயாவும் உயர்த்தப்பட்டுள்ளது.2016-17 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை
அறிக்கையில், 100 நாள் வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்காக ரூபாய்
38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகநிதி அமைச்சர் அருண் ஜேட்லி
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சட்டப்பேரவைத்
தேர்தல் நடக்கும் மாநிலங்களில், ஊதிய உயர்வு குறித்து ஊடகங்களில்
விளம்பரப்படுத்தக்கூடாது, பிரசாரத்திலும் ஊதிய உயர்வுகுறித்து பேசக்கூடாது
என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.