பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை லிட்டருக்கு 98
காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு
முதல் அமலுக்கு வந்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை
நிலவரத்துக்கு ஏற்ப நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை இரு
முறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,
சர்வதேச
அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு மற்றும் டாலருக்கு
எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மாற்றத்துக்கு ஏற்ப
உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள்
உயர்த்தியுள்ளன.அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை
லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வுக்குப் பின்
பெருநகரங்களில் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வருமாறு:பெட்ரோல் (ஒரு
லிட்டர்)
சென்னை ரூ.61.32
தில்லி ரூ.61.87
மும்பை ரூ.67.96
கொல்கத்தா ரூ.65.48டீசல் (ஒரு லிட்டர்)
சென்னை ரூ.50.09
தில்லி ரூ.49.31
மும்பை ரூ.56.09