மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கான தேர்வு மே 25ல் துவங்குகின்றன.இதுகுறித்து பல்கலை கூடுதல்
தேர்வாணையர்
மனோகரன் தெரிவித்துள்ளதாவது:இளங்கலை மற்றும் பி.எட்., தேர்வுகள் மே 25
முதலும். முதுகலை மற்றும் எம்.எல்.ஐ.எஸ்.சி., பட்டப் படிப்புகளுக்கு ஜூன்
1ம் தேதியும், சான்றிதழ், பட்டயம், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும்
திறந்தவெளி தொடக்க மற்றும் அடிப்படை நிலைப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன்
6 முதலும் துவங்குகின்றன. இத்தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்
ஏப்., 22க்குள் ரூ.100 அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்கள்
இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறலாம். அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் கூடுதல்
தேர்வாணையர் முகவரிக்கு விண்ணப்பித்து பெறலாம்.எம்.சி.ஏ., முதுகலை,
இளங்கலை (14 சி மற்றும் 15ஏ பதிவெண்) மற்றும் எம்.பி.ஏ., (15ஏ, 15சி
பதிவெண்) மாணவர்கள் தங்களது முந்தைய மற்றும் தனித் தேர்வுகளை கணினி வழியாக
மற்றும் எழுத்து தேர்வு வழியாக எழுதியிருந்தாலும் 2016 மே அல்பருவமுறைத்
தேர்வுகளை நுாறு மதிப்பெண்களுக்கும் எழுத்துத் தேர்வாக எழுத வேண்டும்.
அவர்கள் திட்ட கட்டுரைகள் அனுப்ப வேண்டியதில்லை. மேலும் விவரங்களுக்கு
கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள்
எதிர்பார்ப்பு:தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க
செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:ஆண்டு தேர்வுகள் முடிந்து, மீண்டும் ஜூன் 1ல்
பள்ளிகள் திறக்கப்படும். முதுகலை படிப்புகளுக்கான தேர்வும், ஜூன் 1ல்
துவங்குகின்றன. பதவி உயர்வு, ஊக்க ஊதியம் பெறுவதற்காக முதுகலை பட்டம் பெற
ஆசிரியர்கள் ஏராளமானோர் தொலைநிலை கல்வி வழி விண்ணப்பித்துள்ளனர். இந்தாண்டு
ஜூன் 1ல் தேர்வுகள் துவங்குவதால், பள்ளிகள் துவங்கும் முதல் நாளில்
விடுப்பு எடுத்து தேர்வை எழுதமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்
முதுகலைக்கு தேர்வு துவங்கும் நாளில் மாற்றம் செய்ய வேண்டும், என்றார்.