பொறியியல் ஆன்லைன் பதிவு 1.4 லட்சத்தை நெருங்குகிறது.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி,
இதுவரையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 260 பேர் ஆன்லைனில்
பதிவுசெய்திருக்கிறார்கள். அவர்களில் 75 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பக்
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியி ருப்பதாக அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர்
எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை
இந்துமதி ஆகியோர் தெரிவித்தனர்.