இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள, 585, ஒழுங்கு முறை விற்பனை நிலையங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணையம் மூலம் இணைக்கப்படும். விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை ஏலம் விடலாம். அதிக விலைக்கு ஏலம் எடுப்போருக்கு, பொருட்களை விற்பனை செய்யலாம்.
ரூ.30 லட்சம்: இதற்கான மென்பொருள் தயாரிப்பு மற்றும் அதை செயல்படுத்தும் பொறுப்பு, வேளாண், கூட்டுறவுமற்றும் விவசாயிகள் நலத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள, ஒவ்வொரு ஒழுங்கு முறை விற்பனை நிலையங்களுக்கும், இந்த திட்டத்தை செயல்படுத்த, 30 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.
கிடைக்கும் பொருட்கள்: முதல்கட்டமாக, தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ், 25 பொருட்கள் விற்பனை செய்ய முடியும்.கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், பருத்தி, நிலக்கடலை, தானிய வகைகள், கடுகு, புளி, மஞ்சள், வெங்காயம், உருளைக்கிழங்கு, ஆப்பிள் உட்பட, 25 பொருட்களை விற்க முடியும்.
அதே நேரத்தில் அடிக்கடி விலையில் மாற்றம் காணும், பழங்கள், காய்கறிகள் ஆகியவை தற்போது சேர்க்கப்படவில்லை.நாட்டிலேயே மிகப் பெரிய, ஒழுங்கு முறை விற்பனை நிலையங்களான, டில்லியில் உள்ள ஆசாத்புர், மும்பையில் உள்ள வாசி ஆகியவை, முதல்கட்டத்தில் இடம்பெறவில்லை.
முதற்கட்டமாக 21 இடங்களில்...: வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியதாவது: முதல்கட்டமாக, எட்டு மாநிலங்களில் உள்ள, 21 ஒழுங்கு முறை விற்பனை நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது. படிப்படியாக அனைத்து மாநிலங்களும் இதில் இணைந்து கொள்ளும்.
முதல்கட்டத்தில், குஜராத்தில், மூன்று கொள்முதல் நிலையங்களும், தெலுங்கானா - ஐந்து, ராஜஸ்தான் - ஒன்று, மத்திய பிரதேசம் - ஒன்று, உத்தர பிரதேசம் -
தற்போது, ஒரு ஒழுங்கு முறை விற்பனை நிலையத்துக்கு செல்லும் விவசாயி, மற்ற மாநிலங்களில் என்ன விலை கிடைக்கிறது என்பது தெரியாமல் விற்கிறார். இனி, எங்கு, என்ன விலை கிடைக்கிறது என்பதை தெரிந்து, அதிக விலை கிடைக்கும் இடங்களில் விற்க முடியும். இதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் எப்போது?: இந்த திட்டத்தில் இணைவதற்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள, மாநில வேளாண் உற்பத்தி விற்பனைக் குழு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.'
இந்த திட்டத்தில் இணைவதற்கு, தமிழகம் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், சட்டத் திருத்தம் செய்யாததால், தமிழகம் இந்த திட்டத்தில் இணையவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.








