அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற
பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
இதன்மூலம் புதிய கல்லூரிகள், பொறியியல் படிப்பில் உள்ள இடங்கள் பற்றிய
விவரங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக
கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல்
கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உட்பட 583 பொறியியல்
கல்லூரிகள் உள்ளன.
இக்கல்லூரிகளில்
மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் சுமார் 2 லட்சம்
இடங்கள் அண்ணா பல்லைக்கழகம் நடத்தும் பொது கலந்தாய்வு மூலம்
நிரப்பப்படும்.தனியார் கல்லூரிகள் தங்களிடம் உள்ள இடங்களில் குறிப்பிட்ட
இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திடம்
ஒப்படைக்கும். அதன்படி, சிறுபான்மையினர் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத
இடங்களும், சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகளில் 65 சதவீத இடங்களும்
கலந்தாய்வுக்கு வழங்கப்படும்.
எஞ்சிய இடங்கள் கல்லூரி நிர்வாகத்தால்
நிரப்பப்படும்.கடந்த ஆண்டு பொது கலந்தாய்வு மூலம் 1 லட்சத்து 69 ஆயிரத்து
795 இடங்கள் நிரப்பப்பட்டன. சுமார் 40 ஆயிரம்இடங்கள் நிரம்பவில்லை. 7
தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை.இந்த நிலையில், இந்த
ஆண்டுக்கான பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு
வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள், புதிய பொறியியல்
கல்லூரிகளில் பாடவாரியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள்
அடங்கிய பட்டியலை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)
ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடும். இதன்மூலம் புதிய
கல்லூரிகள் மற்றும் பொறியியல் படிப்பில் உள்ள இடங்கள் பற்றிய விவரங்களை
மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான
பட்டியலை ஏஐசிடிஇ இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக மாநில
தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொறியியல் படிப்பில்
அகில இந்திய அளவில் 400-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. தமிழகத்தில்
60 விதமான பொறியியல் படிப்பு கள் வழங்கப்படுகின்றன. முன்பு புதுப்புது
பாடப்பிரிவுகள் தொடங் கப்பட்டு வந்தது. மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு
உத்தரவாதம் இல்லாத எந்த புதிய பொறியியல் படிப்பையும் தொடங்க வேண்டாம் என்று
அரசு அறிவுறுத்தியிருப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி
தெரிவித்தார்.