தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில்,காலியாக உள்ள
பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன்
கூறியதாவது:
பல்கலைக்கு, தேர்வு
கட்டுப்பாட்டாளர் மற்றும் தொலைதுார கல்வி இயக்குனர் பணியிடங்கள் காலியாக
உள்ளன. இதற்கு, விண்ணப்பிப்போர், 2016 ஜூலை, 16ன்படி, 45 - 55 வயதிற்கு
உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.tnpesu.org என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை,
'பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம்' என்ற
பெயருக்கு, ஜூன், 15க்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







