Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழக மக்கள் மனசாட்சிப்படி, நிச்சயமாக ஓட்டளிக்க வேண்டிய நன்னாள் இன்று. இந்த, 2016 சட்டசபை தேர்தல், இதுவரை காணாத புதுமைகளை கொண்டிருக்கிறது.
தேர்தல் கமிஷன் எடுத்த கெடுபிடி நடவடிக்கைகளும், பறக்கும் படையின் அதிரடி சோதனைகளும், ஓட்டுக்கு பணம் தரும் பண்பாட்டில், தமிழகம் மூழ்கிக் கிடக்கிறது என்பதை,
நிரூபித்திருக்கின்றன.
பாராட்டத்தக்கவை.
இதுவரை நடந்த, பல சட்டசபைத் தேர்தல் போலன்றி, இத்தடவை பலமுனைப் போட்டி ஏற்பட்டதால், அமெரிக்க தேர்தல் பாணியில் முதல்வர் வேட்பாளர்களாக பலரும் பேசப்பட்டது சிறப்பாகும். இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தற்போது ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி தர முன்வரவில்லை என்பதையும், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள, தே.மு.தி.க.,வின் முக்கிய தலைவரான பிரேமலதா, தங்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தால், கூட்டணியில் உள்ள திருமாவளவன் உட்பட, பலரும் அமைச்சர்கள் என, அறிவித்திருப்பதும் புதுமையாகும்.
மேலும், தே.மு.தி.க.,வின் காவலராக கருதப்படும் பிரேமலதா, கணவர் கட்டளைப்படி தேர்தலில் நிற்கவில்லை என்பதும், தகவலாக வெளிவந்துள்ளது.பா.ம.க.,வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், மேல்மருவத்துார் அடிகளாரை வணங்கி ஆசி பெற்றார் என்பதில் புதுமை இல்லை. ஆனால், தன் வீட்டில் பூஜையறை இருப்பதாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியதும், தனக்குப் பின் தன் வாரிசு யாரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்ற அவரது உத்தரவாதமும், இத்தேர்தலின் தீவிரப் பரிமாணங்களை காட்டுகின்றன.
அது மட்டுமின்றி, முதல்வர் ஜெயலலிதா தன் ஆரம்ப பரப்புரையில் கூறிய தகவல்களில் இருந்து சிறிது சிறிதாக, மற்ற கட்சிகளின் பிரசார வேகத்திற்கு ஈடாக, தேவைப்படும் மக்களுக்கு இலவசம் தருவதாக பேச நேரிட்டது. அது தவிர, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட பணிகள், அந்தந்த தொகுதிகளில் நிறைவேறியதாக விளக்க வேண்டியதாயிற்று.
மத்தியில் ஆளும், பா.ஜ., கட்சி வேட்பாளர்களுக்கு பிரதமரும், 10க்கு மேற்பட்ட அமைச்சர்களும் செய்த பிரசாரத்தில், திராவிட கட்சிகள் ஆட்சியில் இலவச அறிவிப்புகளால், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சிதைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளனர்.
குறிப்பாக, இலவச அரிசி திட்டத்தில், பிரதமர் மோடி படம் இல்லை என்பதைக் கூறி, தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல்வர் ஜெயலலிதா படம் இல்லாத அரசுப் பொருட்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய விதம், தமிழக மக்கள் மனதில் இடம் பெறலாம்.
மின்தடை ஏற்பட்டால், தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா வசதிக்காக என்ற கருத்து, இத்தடவை மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. இனிமேல் புதிய ஆட்சியில் மின்தடை ஏற்பட்டால், அதனால் ஏற்படும் அதிருப்தி உடனடியாக எதிரொலிக்கும்.
தமிழகம் வளர்ந்த மாநிலம், இதன் வளர்ச்சி இனி அதிகரிக்குமா அல்லது பின் தங்குமா என்பதை, இத்தேர்தல் முடிவுகள் காட்டலாம். அதிக அளவு சதவீத ஓட்டுப்பதிவு என்பது, கட்சிகள் பலத்தை அறுதி செய்யும்.சட்டசபையில், ஆளும் கட்சியை ஜனநாயக அடிப்படையில், லோக்சபா விதிகளில் விமர்சிக்க தகுதியான எம்.எல்.ஏ.,க்கள் அதிக எண்ணிக்கையில் வர, மக்கள் அளிக்கும் ஓட்டு இன்று முடிவு செய்தால், அது வித்தியாசமாக இருக்கும்.
ஓட்டு ஒன்றுக்கு, 500 அல்லது 1,000 ரூபாய் வாங்கி ஓட்டுப் போடுவது, அநாகரிகச் செயல். தாங்கள் வசிக்கும் பகுதிகளில், சுற்றுச்சூழல் சாதகமாக, போக்குவரத்து வசதிகளுடன், அரசியல் சுரண்டலுக்கு அப்பாற்பட்ட, வாழ்க்கைத் தரத்தை மக்கள் விரும்புகின்றனரா என்பதையும் இந்த நாள் முடிவு செய்யலாம்.பலமுனைப் போட்டியில், பல விஷயங்கள் அலசப்பட்டதால், அது மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதன் அளவுகோலைக் காட்டும் ஜனநாயகத் திருநாள் இது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








