தமிழகத்தில் 50 லட்சத்து 78 ஆயிரம் அரசு அலுவலர்கள் உள்ளனர். இதில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்தல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அந்தந்த மையத்தில் அவர்களுக்கான ஓட்டு போடும் விண்ணப்பம் எண் 12 விநியோகிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள் பலரும் ஆர்வமாக ஓட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பெட்டிகளில் போட்டனர்.
மாநிலம் முழுவதும் இந்த தபால் ஓட்டு விறு, விறுப்பாக நடந்து வருவதை காண முடிகிறது.
67 துணை ராணுவ குழு படையினர் மே 9ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். மேலும் அவர் கூறுகையில்; தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்க அவசியம் இல்லை. வரும் 12ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் அதிகாரிகள், கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் என்றும் அவர் கூறினார்.








