பெண்கள் ஏன் குங்கும பொட்டு வைக்க வேண்டும் :
பொட்டு வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்குரிய இடம் அதுவே. யோககக்கலை இதனை ஆக்ஞா சக்கரம் என குறிப்பிடுகிறது. இந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்துகிறது. அதிலும் முன் நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளிப்படுத்துவதில் முக்கியமானவை. அதனால்தான் நம் மனம் கவலையால் வாடும் போது தலைவலி அதிகமாவதை உணரலாம்.
நெற்றியில் இடும் திலகம் , அந்த பகுதியை குளிரவைக்கிறது ; மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதை தடுக்கிறது. எனவே , நெற்றி திலகம் நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அனுகாமல் , தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கிறது. நெற்றியில் திலகத்தை வைத்துக்கொள்ளும் போது , நான் கடவுளை எப்போதும் மனதில் நிலை நிறுத்துகிறேன். இறை தன்மையுள்ள இந்த உணர்வு எனக்கு எல்லா செயல்களிலும் ஊடுருவி பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றி திலகம் லக்ஷ்மிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும் போது ,
" ஸ்ரீயை நமஹ " என்ரோ " மஹாலக்ஷ்மியே போற்றி " என்ரோ சொல்லியப்படி வைத்துக் கொள்வது பெண்களுக்கு நலமாகும். குங்குமத்தை மோதிர விரலால்தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களை பயன்ப்படுத்தக்கூடாது. பெண்கள் தலை வகிடிலும் , மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்க வேண்டும். இந்த மூன்று இடங்களிலுமே லக்ஷ்மி குடியிருப்பதாக ஐதீகம். கோயில்களிலோ வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுகொண்டு , வலது கைவிரலால் தொட்டு வைப்பதுக் கூடாது. யாராவது ஒருவரை வலது உளளங்கையில் சிறிதளவு போடச் சொல்லி , வலது மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
- சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் சேமத்தைக் கொடுக்கும்..
- சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் இருப்பிடம். சுமங்கலியின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
- வீட்டிற்கு வரும் சுமங்களிகளுக்கு குங்குமம் கொடுப்பது ; தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தை பெறுக்கும்.
- குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பிறகுதான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
- அரக்கு நிற குங்குமம் சிவசக்தியைக் குறிக்கும். தெய்வீகத் தன்மை , சுப தன்மை , மருத்துவ தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம் , உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாக்கும்.
வாழ்க வளமுடன்







