தமிழகத்தில் தொடக்கப் பள்ளி, பள்ளிக்கல்வி, அனைவருக்கும் கல்வி இயக்கம், எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமான ஆர்.எம்.எஸ்.ஏ., என, பல துறைகளின் கீழ், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இடம் மாறுதல், விடுப்புகளை சரிசெய்தல், பாஸ்போர்ட் வாங்க அனுமதி, பி.எப்., மற்றும் பதவி உயர்வு பெறுவது என, அனைத்து வகையான பணிகளுக்கும், கல்வி அலுவலக பணியாளர்களையும், மேலதிகாரிகளையும், 'கவனிக்க' வேண்டியது கட்டாயம். இதில் சிலஅதிகாரிகளும், பணியாளர்களும் மட்டும் விதிவிலக்கு.
இந்தாண்டு இந்த தேர்வு நிலை அந்தஸ்தை பெற, ஆசிரியர்கள் தங்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தலைமை ஆசிரியர்கள் மூலமும் தேவையானவற்றை
கவனித்துவருகின்றனர்.
ஆனால், மதுரை மாவட்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர், நேற்று முன்தினம், அலுவலகத்துக்கு மனுக்கள் கொண்டு சென்ற, 50 ஆசிரியர்களுக்கு, உடனடியாக ஆவணங்களை ஆய்வு செய்து தேர்வு நிலை அந்தஸ்து சான்றிதழ் வழங்கிஉள்ளார்.
இதனால், திக்குமுக்காடி போன ஆசிரியர்கள்,
- நமது நிருபர் -








