மனிதர்களில் பலப்பேர் தன்னை தாண்டி யோசிப்பதே இல்லை. தான், தான், தான் என்கின்ற எண்ண ஓட்டத்தில் ஒரு சுயநல வாழ்க்கை வாழுகின்றனர். தான் வாழ்ந்தால் போதும் என்கின்ற மனநிலைதான் பலருக்கு. சில நேரங்களில் அவர்களை பார்த்தால் நமக்கு எரிச்சல் வரும் சென்று அவர்களின் முகத்தில் அடிக்கவேண்டும் என்று தோன்றும்.
அந்த மனிதர் நமக்கு நெருங்கிய உறவாக இருக்கலாம், நாம் சந்தித்த மற்றும் சந்திக்காத மனிதராக இருக்கலாம், நமக்கு மேல் அதிகாரியோ சக ஊழியரோகூட இருக்கலாம். துணைவனோ அல்லது துணைவியாகவோ இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் செயல்கள் எல்லாமே ஒரு அக்மார் முத்திரை குத்தப்பட்ட சுயநலம் என்றால் நமக்கு வரும் கோபமும், வன்மமும் தோன்றும். அப்போது அவர்களை எதிர்த்தோ அல்லது திட்டவோ முடியாத சூழ்நிலையில் நாம் நம் மனதினுள் சபிப்போம்.அது மட்டுமே நம்மால் செய்ய முடியும்.
ஒவ்வொரு மனிதனும் இப்படி தன்னை தாண்டி சிந்திக்காமல் சுயநலமாக சிந்தித்தால் அதனால் நம்மை சார்ந்ததவர்களுக்கோ, உறவுகளுக்கோ பாதிப்பு ஏற்படுமானால் அதனால் அப்போது நமக்கு நன்மையாக இருக்கலாம் அதனால் "தான்" என்கின்ற அகங்காரம் நம்மை அத்தருணத்தில் நம்மை திருப்தி படுத்தலாம் ஆனால் காலம் அதோடு நின்றுவிடாது.அந்த மனிதர் நமக்கு நெருங்கிய உறவாக இருக்கலாம், நாம் சந்தித்த மற்றும் சந்திக்காத மனிதராக இருக்கலாம், நமக்கு மேல் அதிகாரியோ சக ஊழியரோகூட இருக்கலாம். துணைவனோ அல்லது துணைவியாகவோ இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் செயல்கள் எல்லாமே ஒரு அக்மார் முத்திரை குத்தப்பட்ட சுயநலம் என்றால் நமக்கு வரும் கோபமும், வன்மமும் தோன்றும். அப்போது அவர்களை எதிர்த்தோ அல்லது திட்டவோ முடியாத சூழ்நிலையில் நாம் நம் மனதினுள் சபிப்போம்.அது மட்டுமே நம்மால் செய்ய முடியும்.
ஒன்றை புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் இன்று என்ன செய்கிறோமோ, செய்யப்போகிறோமோ அது நன்மையாக இருக்கலாம் அல்லது தீமையாக இருக்கலாம் எது செய்தாலும் காலம் கடந்து வரும் பலன் வட்டியோடு நமக்கு அந்த நன்மையையோ அல்லது தீமையையோ நமக்கு வந்தே தீரும்.
ஒரு உதாரணம் வேண்டுமானால் நீங்கள் பார்க்கும் புதிய நபரை பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்து பாருங்கள் அதே புன்னகை அந்த மனிதரிடமிருந்து நாம் திரும்ப பெற முடியும். அதே மனிதரை நாம் கோபமாய் பார்த்தால் அதே கோபம் கொஞ்சமும் குறையாமல் நமக்கு கிடைக்கும். இன்று நாம் சுயநலமாக இருந்தால் இன்னொருவர் நம்மிடம் அதே சுயநலத்தொடுதான் நம்மிடம் பழகுவார்.உலகத்திற்கு நாம் என்ன கொடுக்கிறோமோ அதேதான் நமக்கு திரும்பவரும்.
அக்பர் தனது சபையில் பீர்பாலிடம் கேட்டார் பீர்பால் நாம் ஒன்றை மற்றவருக்கு நாம் கொடுத்தால் அதுவே நமக்கு திரும்ப வரும் என்பது உண்மையா என்று கேட்டார். அதற்கு பீர்பாலும் ஆம் அரசே நாம் செய்யும் நன்மையாகினும், தீமையாகினும் நாம் ஒன்று செய்தால் அது நமக்கு திரும்ப நமக்கே வரும் என்றார். அப்படியானால் பக்கத்தில் வா என்று பீர்பாலை அழைத்து அவரது கன்னத்தில் அடிகொடுத்துவிட்டு நீ கூறுவது உண்மையானால் இன்று இரவிற்குள் இந்த அடி எனக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று சொன்னவாறே சென்றுவிட்டார் அக்பர்.
உடனே வீ ட்டுக்கு வந்த பீர்பால் தனது மனைவியை வரசொல்லி ஒரு அடிகொடுத்தார் பிறகு தனது மனைவியை பார்த்து இன்று ஒரு கனவு கண்டேன் அதில் கடவுள் தோன்றி உனக்கு மிகவும் பிடித்தவர்க்கு ஒரு அடி கொடுக்க சொன்னார் எனக்கு உன்னைத்தான் மிகவும் பிடிக்கும் அதனால்தான் உன்னை அடித்தேன் என்று சொன்னார்.
அவரது மனைவி சென்று அதேபோல் தனது தோழி கன்னத்தில் அடித்து பீர்பால் கூறியதைபோல் தனது கனவில் கடவுள் வந்து தனக்கு பிடித்தவர்களை அடிக்க சொன்னதாகா சொல்லி அடித்துசென்றார். இவ்வாறு ஒருவரை மற்றவர் அடிப்பது ஒரு விளையாட்டாக எல்லோரும் செய்தனர்.
இரவு அரசர் வந்ததும் ராணி அரசரது கன்னத்தில் அடித்தார். அரசரும் அதிர்ச்சியாக பார்த்தார் அதற்கு ராணி சொன்னார் நமது நாட்டில் ஒரு விளையாட்டு துவங்கி இருக்கிறார்கள் அதன்படி நமக்கு யாரை மிகவும் பிடிக்குமோ அவரது கன்னத்தில் ஒரு அடி கொடுக்க வேண்டுமாம் இப்போதுதான் தோழி என்னை அடித்தாள் நான் உங்களை அடிக்கிறேன் என்று கூரினார்.
அப்போதுதான் அரசருக்கு புரிந்தது, ஒன்று நாம் செய்தால் அதுவே நமக்கு திரும்பவும் வரும் என்பதை.
சுயநலமும் அப்படிதான் நாம் ஒருவரோடு சுயநலமாக நடந்து கொண்டால் நம்மிடமும் பிறர் சுயநலமாக நடந்துகொள்வர்.
சுயநலமில்லாமல் வாழ்வோம்
--இனிய காலை வணக்கம்
--அன்புடன்-து.ராமராஜ்-நாமக்கல்