மருத்துவம், இன்ஜி., கவுன்சிலிங்கில் மாற்றுத் திறனாளிஒதுக்கீட்டில்,
விளையாட்டு வீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின்சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களுக்கு தனி
ஒதுக்கீட்டில், மருத்துவம், இன்ஜி., மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆனால்,
மாற்றுத் திறனாளிகளில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தனியாக ஒதுக்கீடு
பெறுவதில்லை.இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தடகள
பயிற்சியாளருமான ரஞ்சித்குமார் கூறும்போது, ''தேசிய போட்டிகளில் வெற்றி
பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு ரொக்கப்பரிசு வழங்குவதில்லை.
'பாராலிம்பிக்' சர்வதேச போட்டிகள் மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி
பெறுவோருக்கு அரசின் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது,'' என்றார்.தமிழ்நாடு
பாராலிம்பிக் சங்க மாநிலத் தலைவர் நாகராஜன் கூறும்போது, ''2015ல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான
தடகள போட்டியில், இந்தியாவிலிருந்து, 200 பேர் பங்கேற்று, 178 பதக்கங்களை
வென்றனர். தமிழகத்தின் சார்பில், எட்டு பேர் பங்கேற்று, 12 பதக்கங்களை
வென்றனர். இவர்களின் உடல்திறன் குறைவு தன்மைக்கேற்ப, வேலைவாய்ப்பிலும்,
உயர் கல்வியிலும், தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என்றார்.