அரசு துறைகளில் தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 481 பேர்
அழைக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி.,
வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 2013 - -14 மற்றும் 2014- - 15ம்
ஆண்டுக்கான, குரூப் - 4 பதவிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு, 314
காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., மூலம் 2014 டிச., 21ல் எழுத்துத்
தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,
ஜூன், 15 முதல், 17ம் தேதி வரை, சென்னையில் நடக்கும்.இதற்கு தேர்வு
செய்யப்பட்ட, 481 விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. இணைய தளத்திலும் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு
செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.