2ஜி
சேவை உள்ளிட்ட இலவசதொலைபேசி அழைப்பு சேவை வழங்கும் புதிய ஆப்ஸ் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆப்ஸ் இந்தியாவில் அதிகமானவர்களால்
டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.சிங்கப்பூரைச் சேர்ந்த இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனம் 'நானு' உலகின் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி இந்த ஆப்ஸ் பயன்படுத்துவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலவச தொலைபேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெற முடியும். இலவச சேவை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சிங்கப்பூர் நிறுவனம் 20,000 அமெரிக்க டாலர்களை வழங்கும்.








