நடப்பு நிகழ்வுகள் வினா / விடை குறுந்தொகுப்பு.
(போட்டித் தேர்வுகளுக்கு உபயோகப்படு)
01) கேரள சட்டசபையின் புதிய சபாநாயகர் யார்?
02) ஆப்கன் -- இந்தியா நட்புறவு அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
03) ஆப்கன் -- இந்தியா நட்புறவு அணையில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் திட்டத்தின் அளவு என்ன ?
04) சமீபத்தில் மரணமடைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இயற்பெயர் என்ன ?
05) டென்னிஸ் போட்டிகளில் விளையாடியதன் மூலம் பரிசுத்தொகையாக 100 மில்லியன் அமெரிக்க டாலர் வென்ற முதல் வீரர் யார்?
06) தென்கொரியாவில் 2018ல் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் சின்னம் ( ,Mascot ) எது?
07)
நாடு முழுவதும் 650 தபால் நிலைய வங்கிகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்?.
08)
போலிசாருக்கு வார விடுமுறை வழங்கும் திட்டம் உ.பி. மாநிலத்தின் எந்த
காவல்நிலையத்தில் பரிட்சார்த்த முறையில் துவங்கப்பட்டுள்ளது?.
09) பிரதமர் மோடியின் தாயாருக்கு உ.பி. மாநில செய்தித்தாள் வழங்கிய விருது என்ன?.
10) மே 2016ல் பரிசோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை செல்லும் தூரம் எவ்வளவு ?
11) மே 2016ல் சீர்மிகு கிராமம் ( Smart Village ) என்னும் திட்டத்தை துவக்கிய மாநிலம் எது?
12)
United Nations Alliance of Civilizations (UNAOC) என்னும் அமைப்பு
வழங்கிய The Intercultural Innovation Award (IIA) 2016 பெற்ற தன்னார்வ
தொண்டு நிறுவனம் எது?
13) PEHAL என்னும் திட்டத்தை துவக்கிய மாநிலம் எது?
14) சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் கோவா மாநிலத்தின் எந்த கடற்கரைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது?
15) My stamp திட்டத்தின்கீழ் எந்த மின்னணு வர்த்தக நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட 5ரூ தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது?
16)
சுற்றுலா விசா மற்றும் e விசா மூலம் வெளிநாட்டினர் இந்தியாவில்
குறுகியகாலம் எந்த பயிற்சியை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது?
17) முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எந்த மாநிலத்தின் மூலம் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்வு பெற்றுள்ளார்?
18) தமிழக சட்டசபை சபாநாயகர் திரு. தனபால் எந்த தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ளார்?
19) தமிழக சட்டசபை துணை சபாநாயகர் திரு. ஜெயராமன் எந்த தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ளார்?
20) சமீபத்தில் நவநிர்மான் வாரம் கடைபிடித்த மாநில அரசு எது ?
21) சமீபத்தில் ஒய்ன் தீம் பார்க் ( Wine theme park ) எங்கு துவங்கப்பட்டுள்ளது? அதன் பெயர் என்ன ?
.
விடை
=======
.
01) ஸ்ரீ ராமகிருஷ்ணன்
02) Chist - e - Sharif
03) 42 மெகா வாட்
04) காசியஸ் மார்சில்லஸ் கிளே ஜூனியர்
05) செர்பியாவின் நோவோக் ஜோக்கோவிச்
06) Soohorang என பெயரிடப்பட்டுள்ள வெள்ளை புலி
07) செப்டம்பர் 30, 2017
08) மகராஜ்பூர் காவல் நிலையம்., கான்பூர் மாவட்டம்.
09) நாரி ஜக்ரான் சம்மன்
10) 290 கி.மீ ... ( பிரித்வி 2 -- 350 கி.மீ. )
11) குஜராத்
12) Routes 2 Roots
13) ஹிமாச்சல பிரதேஷ்
14) கால்ஜிபக் ( Galjibag beach )
15) அமேசான்
16) யோகா பயிற்சி
17) மகாராஸ்டிரா
18) அவினாசி
19) பொள்ளாச்சி
20) ஆந்திரா ( ஜூன் 02 முதல் 08 வரை)
21) பிரான்ஸ் ( La cite du vin)







