அதன்படிநிகழ் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்காகஒரு கோடியே 97 லட்சத்து 65,850 புத்தகங்களும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 57 லட்சத்து 84,500 புத்தகங்களும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்காக 83 லட்சத்து 16,000 புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.தனியார் பள்ளிகளுக்கு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை 74.6 லட்சம் புத்தகங்களும், பத்தாம் வகுப்புக்கு 17.2 லட்சம் புத்தகங்களும், பிளஸ் 2வகுப்புக்கு 22.8 லட்சம் புத்தகங்களும் விற்பனையில் உள்ளன. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்காக 7லட்சத்து 47,000 புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைகாட்சியின்மூலம் அனைத்து தாலுகா தலைமையிடங்களில் செயல்படும் 285 அரசு பொது இ-சேவை மையங்களின் மூலம் பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் புத்தகங்களின் இருப்பை அறிந்துகொண்டு, வேண்டிய புத்தகங்களை பதிவு செய்து அதற்கான தொகையை செலுத்தி தங்களின் முகவரிக்கு கூரியர் சர்வீஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் 10 நாள்களில்: பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தற்போது அச்சிடப்பட்டு வருவதால், இன்னும் 10 நாள்களில் அந்த வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வித்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.