தேர்வில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக காப்பியடித்தது குறித்து, ஆய்வு நடத்தி
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை பல்கலைக்கு, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத்
ஆண்கள் கல்லுாரியில், 2013 நவம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வில், மாணவர்கள்
ஒட்டு மொத்தமாக காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில்,
கல்லுாரிக்குஎதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும், சட்டப்பூர்வ நடவடிக்கை
எடுக்கும்படி, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர், டி.ஜி.பி., மற்றும் சென்னை
போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடக் கோரி, செல்வி என்பவர், சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய, 'முதல்
பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மாணவர்கள், ஒட்டு மொத்தமாக காப்பியடித்தது
குறித்து விசாரிப்பதாக, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்கலை, இந்த
விவகாரம் குறித்து ஆய்வு செய்து, குற்றச்சாட்டில் உண்மை இருந்தால்,
சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு 'முதல்
பெஞ்ச்' உத்தரவிட்டது.