மொழிபெயர்ப்பாளர் விருது' பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'பிற
மொழி படைப்புகளை, சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும், 10
மொழிபெயர்ப்பாளர்களுக்கு, ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பாளர் விருது
வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிற மொழி
படைப்புகளை தமிழாக்கம் செய்து வரும் மொழிபெயர்ப்பாளர்கள், விருதுக்கு
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், புகைப்படத்துடன் தன் விவர குறிப்பு;
மொழிபெயர்ப்பு செய்த நுால்கள் விவரம்; அவற்றின் ஒரு பிரதி ஆகியவற்றை,
ஜூலை, 31ம் தேதிக்குள், 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், முதல் தளம், தமிழ்
சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும்
விவரங்களுக்கு, 044 -- 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.